Thamizh fair celebration

Thamizh fair virtual celebrations (Part 1) will be presented this Saturday – January 23rd  between 4:30 pm to 6:30 pm. You can watch the program here: YouTube link, VTA homepage.

We request all members to join in the virtual event and encourage the kids.


VTA Text and workbooks feedback

VTA has been conducting discussion groups all week with teachers on making improvements to our study materials. It is critical to receive inputs from all parents.

Some examples to report feedback are: Page 2 – very lengthy and complex words. Page 26 has a lot of typing errors etc.  Please register your sincere and detailed feedback through the Google form link.


Free Thamizh workshop by VTA students

A group of VTA students are conducting a free Thamizh workshop on Sundays during the month of January.  It is an excellent initiative by our kids.

Please register your kids and it would be a great motivation for the tutors as well. Please click this link for additional details.


Regular classes this week

Saturday, Jan 23, 2021 

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Kural for the week

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். (722) 

 தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார். 

Those who can speak in clear terms before the learned, and make understanding better, will be regarded as the most learned among the learned


வ.த.மை இணையவழித்தமிழ்க்கண்காட்சி

தமிழர் திருநாளை முன்னிட்டு இணையவழித் தமிழ்க்கண்காட்சியின் முதல் பாகம் சனவரி23 ஆம் தேதி மாலை 4:30 – 6:30pm ஒளிபரப்பாகவுள்ளது. நிகழ்ச்சிக்கான இணைப்புகள்: YouTube நேரலை, நம் பள்ளி வலைப்பக்கம்.


வ.த.மை நூல்களுக்கான பின்னூட்டங்கள்

நம் புத்தகங்களில் தமிழ் கற்றலுக்கு ஏதுவான முன்னேற்றங்களை செய்ய கல்விப்பணிக்குழுவிற்கு  பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பின்னூட்டங்கள் மிக மிக அவசியம்.  மேலோட்டமாக இல்லாமல், குறிப்பிட்ட விஷயங்களை (உதாரணம்: பக்கம் 4 – நிறைய சொற்கள் கடினமாக, நீளமாக உள்ளன, பக்கம் 24 – எழுத்து பிழைகள்) எடுத்துச் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.  உங்கள் குழந்தைகளுக்கு நீங்களும் ஆசிரியர்கள் தான். அதனால் உங்கள் கருத்துகள் இல்லாமல் இந்த முயற்சி வெற்றி பெறாது. உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகுள் படிவத்தில் தெரிவிக்கவும்.


வ.த.மை மாணவர்களின் இலவச தமிழ் பட்டறை

நம் பள்ளியின் குழந்தைகள் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக தமிழ் பட்டறை நடத்தி வருகிறார்கள். இது பாராட்டத்தக்க விஷயமாகும். உங்கள் குழந்தைகளை பட்டறையில் சேர்த்து, ஊக்கம் அளித்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.


வாராந்திரவகுப்புகள்

சனி, சனவரி 23, 2021

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம்.


வாரம் ஒரு குறள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். (722) 

 தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார். 

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!