எங்கும் தமிழே முழங்கக் கேட்போம்
– திரு வி.கல்யாணசுந்தரனார்
எதிலும் தமிழே வழங்கக் கேட்போம்
பொங்கும் தமிழின் இலக்கிய சுவையை
பூமியின் மீது உலவ விடுவோம்
கங்கை தவழும் இமயம் கடந்து
கன்னித்தமிழை கொண்டு செல்வோம்
திங்கள் செல்லும் விண்வெளிப் பாதையில்
மங்காத் தமிழொளி சிந்தக் காண்போம்
கடல் கடந்து நாம் வாழ்ந்தாலும், கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகளுக்கேற்ப, நாம் கற்ற செம்மொழியாம் தமிழ் மொழியை நம் குழந்தைகளுக்கும் கற்று கொடுக்கிற உயர்ந்த நோக்கோடு செயல் பட்டுக் கொண்டிருக்கின்ற வள்ளுவன் தமிழ் மையத்தின் குழந்தைகளுக்கிடையே, தமிழை மென்மேலும் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் விதத்திலும், நம் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, மொழியின் சிறப்புகளை நம் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் நோக்கிலும், முத்தமிழையும் உள்ளடக்கிய சாரம்சத்தில் குழந்தைகள் தங்களுடைய திறமையை அருமையாக வெளிபடுத்த
ஒரு அறிய வாய்ப்பு.
அனைவரும் உங்கள் குழந்தைகளை ஊக்குவித்து, அனைத்து நிகழ்ச்சிகளையும் மாபெரும் வெற்றியாக்க உங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வேண்டுகிறோம்.
- சித்திரம், நம் குழந்தைகளின் படைக்கும் திறனைக் காட்டும்.
- தமிழ் இசை, நம் குழந்தைகளின் இசை ஆர்வத்தை நிரூபிக்கும்.
- விளம்பரவேளை, நம் குழந்தைகளின் சிந்தனை திறனை அரங்கேற்றும்.
- தமிழ்த்தேனீ குழந்தைகளுக்குப் புதுச்சொற்களை அறிமுகப்படுத்தும்.
- வினாடி வினா அவர்களின் தமிழ் பொது அறிவை சோதிக்கும்.
“தேமதுர தமிழோசை பாரெங்கும் பரவும் வகை செய்வோம்” என்ற பாரதியின் கனவு நனவாகி கொண்டே இருக்கிறது.
முக்கிய குறிப்புகள்
- போட்டிகளுக்கு உங்கள் குழந்தைகளைப் பதிவு செய்வது எப்படி? – இங்கே பார்க்கவும்.
- போட்டிகளின் பதிவுக்கான கடைசி தேதிவரை நீங்கள் என் வள்ளுவன் பக்கத்தில் உங்கள் பதிவில் மாற்றங்களைச் செய்யலாம்.
- கூடுதல் மின்னஞ்சல்களினால் குழப்பம் வருவதால், இந்த முறை போட்டிகளின் பதிவுக்கான கடைசி தேதி முடிந்த பிறகு தான் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படும். நீங்கள் பதிவு செய்தவுடனே மின்னஞ்சல் எதிர்பார்க்காதீர்கள்.
சித்திரம்
Arts/Kolam
விளம்பர வேளை
Adzap
திருக்குறள் போட்டி
Thirukkural Competition
ஆத்திசூடி
Aathichudi
தமிழ்க் கண்காட்சி
Tamil Fair
பேச்சுப்போட்டி
Speech and Debate
தமிழ்த்தேனீ
Tamil Bee
Guidelines
Word Lists
If you have any questions and/or suggestions, please email culturalleads@valluvantamil.org.