Obituary/Condolence message

One of VTA’s former members Mr. Siva Srinivasan passed away on January 31, 2021. VTA expresses their deepest condolences to the bereaved family.


A conversation with parents

Following our meetings with the teachers, VTA is now reaching out to the parents to share their experiences on online sessions and provide feedback on the books. We strongly recommend that the parents join the scheduled meetings, zoom links for the meeting will be shared soon.

iLamazhalai – Nilai 2: February 20, 4:30-6pm

Nilai 3- Nilai 5; February 27, 4:30-6pm

Nilai 6 – Nilai 8: March 6, 4:30-6pm

You can provide your feedback on the books prior to the meeting through the Google form link here.


Drawing/Painting/Rangoli and Music showcase

After a successful thamizh fair, we would like to showcase our kid’s drawing/painting/rangoli and music skills through our Youtube platform.

The guidelines for the drawing/painting/rangoli event has been already posted on our website.  The last day for submission is February 26th. We are also seeking entries for our music showcase. Please look at this link for more details. 


VTA 10th year anniversary celebrations

To celebrate VTA completing 10 years, we request all students, teachers, parents, and volunteers to submit articles/videos/paintings/wishes commemorating the milestone. Specifically, we encourage the kids to showcase their talent through this opportunity. We will publish submitted material through our website, Youtube, and Facebook pages. Your submissions can be turned in through this Google Form link.


FETNA’s Thamizh speech competition

FETNA is organizing a competition to find good young thamizh speakers and our Thamizh Sangam is seeking students from thamizh schools in our area to submit recorded audios/videos for screening/selecting best speakers. Last date to send entries is February 5, 2021. Please check here for more details.


Regular classes this week

Saturday, Feb 06, 2021 

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Kural for the week

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.. (975)

அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.

People who value the virtue of greatness will be able to perform difficult deeds in a skillful manner


நீத்தார் இரங்கல் அறிவிப்பு

நம் பள்ளியின் முன்னாள் உறுப்பினர் திரு.சிவா ஸ்ரீனிவாசன் கடந்த சனவரி 31ஆம் தேதி மரணமடைந்தார். அவர் குடும்பத்தார்க்கு நம் பள்ளி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்


பெற்றோர்களுடன் ஒரு கலந்துரையாடல்

ஆசிரியர்களிடம் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, பெற்றோர்களுடன் இணையவழி வகுப்புகள் மற்றும் புத்தகங்களுக்கான பின்னூட்டங்களைச்  சேகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கூட்டங்கள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இளமழலை – நிலை2: பிப்ரவரி 20, மாலை 4:30-6 மணி வரை

நிலை3 – நிலை5: பிப்ரவரி 27, மாலை 4:30-6 மணி வரை

நிலை6 – நிலை8: மார்ச் 6, மாலை 4:30-6 மணி வரை

இவைகளுக்கான ஜூம் இணைப்பு தகவல்கள் விரைவில் பகிரப்படும்.  இந்த தேதிகளுக்கு  முன்பாக, புத்தகங்கள் பற்றிய உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகிள் படிவத்தின் மூலம் சமர்ப்பிக்கவும்.


ஓவியம்/கோலம் மற்றும் இசை விழா

இந்த ஆண்டு தமிழ்க்கண்காட்சியை தொடர்ந்து ஓவியம்/கோலம், இசை, தமிழ்த்தேனீ போன்ற நிகழ்ச்சிகள் நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

ஓவியம்/கோலத்திற்கான வரைமுறைகள் வ.த.மை இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.  குழந்தைகளின் படைப்புகளை அனுப்ப கடைசி நாள் பிப்ரவரி 26. பாட்டு/இசை நிகழ்ச்சிக்கும் பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.


தமிழ்க்கண்காட்சிக்கான இணைய இணைப்புகள்

நம் பள்ளியின் இணையவழிக் கண்காட்சியின் பதிவை காண:  முதல் பாகம், இரண்டாம் பாகம்.


வ.த.மை 10வது ஆண்டு கொண்டாட்டம்

நம் பள்ளி 10 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு, குழந்தைகள், பெற்றோர்கள், உறுப்பினர்கள், மற்றும் தன்னார்வலர்களிடமிருந்து கட்டுரை, கவிதை, ஓவியம், காணொளி, வாழ்த்துமடல் வரவேற்கப்படுகின்றன. குறிப்பாகக் குழந்தைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றை இணையத்தளத்திலும், Youtube ஒளியலைவரிசை மற்றும் முகநூல் வாயிலாக பகிர்வோம். மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.


பேரவையின் “தமிழ்கூறும்தலைமுறை” நிகழ்ச்சி

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) “தமிழ் கூறும் தலைமுறை” நிகழ்ச்சிக்காக சிறந்த இளைய பேச்சாளர்களை நம் தமிழ்ச் சங்கம் தேர்வு செய்ய உள்ளது . இந்த போட்டிக்கு நம் வட்டார தமிழ் பள்ளிகளில் இருந்து சிறந்த பேச்சாளர்களின் ஏற்கனவே பதிவு செய்த காணொளியை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.  பதிவுகளை அனுப்ப கடைசி நாள் பிப்ரவரி 5, 2021. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.


வாராந்திரவகுப்புகள்

சனி, பிப்ரவரி 6, 2021

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம்.


வாரம் ஒரு குறள்

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.. (975)

அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!