No Regular classes this week

Spring break – March 27 (no classes)

Regular classes will resume on April 3rd


Help wanted for VTA 2020-21 year book!

We are requesting volunteers to help with year book activities and make it a success like the last two years. If you are interested, please send an email to help@valluvantamil.org.


VTA arts and music showcase YouTube links

We showcased our students’ arts and musical talents as part of our cultural events on our school’s YouTube platform.  The links (Part 1, Part 2) are available.  Congratulations to all the kids who shared their artwork and songs. We appreciate every parent’s role in encouraging their kids to participate in the event.

Thank you to all those who tuned in to watch the program.


FETNA Kural bee and Thamizh bee contests

Kural Bee is an event where kids can recite as many Thirukkurals as they can.  You can register directly in the FETNA provided Google form.  As an extra incentive, schools where kids recite the most number of thirukkurals will be recognized. Please encourage your kids to participate in the event.

Kural Bee competition date: Saturday, April 24, 2021

Last date for registration: Saturday, April 3, 2021.

FETNA is also conducting thamizh bee competition for all the kids. Please check this link to register your kids for the VTA screening process. 

Last date to register for Thamizh bee: March 26, 2021.

For further details, you can reach out to FetnaTamilBee@valluvantamil.org.


Kural for the week

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை. (985) 
 

ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே..

Humility is a trait of achievers who can use that virtue to get work done and also as a weapon to befriend even their enemies.


வாராந்திர வகுப்புகளுக்கு விடுமுறை

இந்த வாரம் மார்ச் 27ஆம் தேதி வசந்தகால இடைவேளையொட்டி வகுப்புகள் நடைபெறாது.

அடுத்த வாரம் (ஏப்ரல் 3) வகுப்புகள் மீண்டும் தொடங்கும்.


உங்கள் உதவி தேவை! வ.த.மை 2020-21 ஆண்டு மலர்

முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் நம் ஆண்டு மலரை சிறப்பாக வடிவமைக்க தன்னார்வலர்கள் தேவை. அந்த குழுவில் உதவ விருப்பம் இருப்பவர்கள் வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


வ.த.மை ஓவியம்/கோலம் மற்றும் இசை விழா

சென்ற இரண்டு வாரங்களாக நடைபெற்ற நம் குழந்தைகளின் ஓவியம் மற்றும் இசை விழா நிகழ்ச்சியை நம் பள்ளியின் YouTube தளத்தில் (பாகம் 1, பாகம் 2) காணலாம்.  இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள். நிகழ்ச்சியை கண்டுகளித்த அனைவருக்கும் நன்றி.


பேரவை தமிழ்த்தேனீ மற்றும் குறள் தேனீ போட்டிகள்

குறள் தேனீ ஒரு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி. நேரடியாக பேரவைப் படிவத்தில் பதிவு செய்யலாம். அதிக திருக்குறள்கள் ஒப்புவிக்கும் பள்ளிகளுக்கு பாராட்டுகளும், அங்கீகாரமும் வழங்கப்படவுள்ளது. போட்டியில் பங்கேற்க உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறள் தேனீ போட்டி நாள்: ஏப்ரல் 24, 2021

பதிவு செய்ய கடைசி நாள்:  ஏப்ரல் 3, 2021

இந்த ஆண்டும் வட அமெரிக்க தமிழ்ப் பேரவை தமிழ்த்தேனீ போட்டிகளை நடத்த ஆயத்தங்கள் செய்து வருகிறது. உங்கள் குழந்தையை பதிவு செய்ய இந்த இணைய பக்கத்தை பார்க்கவும்.

பதிவு செய்ய கடைசி நாள்:  மார்ச் 26, 2021


வாரம் ஒரு குறள் 

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை. (985) 
 

ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே..

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!