No Regular classes this week

May 29, 2021: Memorial day holiday. No classes

June 5, 2021: Last day of classes for this year


VTA COVID Relief Fund Raising Efforts

We have completed our COVID-19 fundraising efforts on May 25. Thanks to all of your generous charitable nature, we raised $22,477.  We are grateful for your timely contribution and take this opportunity to thank all the volunteers who spent their time on this noble cause. Much appreciated!!


2020-21 Parents Feedback Survey will be open in a couple of days!

We will be sending out our annual Parents’ feedback survey in a day or two. It is one of the important means by which your voice can be heard. Please fill the survey and help us improve our services.

The last date for submission is June 15, 2021.


VTA Talent Showcase Videos

We have added 13 new videos to the VTA YouTube channel under VTA Talent Showcase playlist. It is delightful mix of mazhalai kids telling stories, Nilai 6 compiling our five great epics, songs, dances and recitals! Don’t forget to check it out!


Kural for the week

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (504)  

ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

One should consider a person’s good qualities, as well as his/her faults, and then judge the character by that which prevails the most.


வாராந்திரவகுப்புகளுக்கு விடுமுறை

மே 29, 2021: பள்ளி விடுமுறை, படை வீரர் நினைவு நாள்.

ஜூன் 5, 2021: இந்த கல்வியாண்டின் கடைசி நாள்.


வ.த.மையின் COVID நிவாரண நிதிதிரட்டும்முயற்சி

கோவிட் நிதி திரட்டும் முயற்சி மே 25 முடிவடைந்தது. உங்கள் அனைவரின் பேராதரவாலும், கருணைக் கொண்ட தொண்டுணர்வாலும் $22,477 திரட்டுயுள்ளோம்.  பங்களித்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக நேரம் செலவிட்டு உழைத்த தன்னார்வலர்கள் எல்லோர்க்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்


2020-21 பெற்றோர்கள் கருத்தாய்வு ஓரிரு நாளில் வெளியீடு

ஒவ்வொரு வருடமும் போல இந்த ஆண்டும் நாங்கள் உங்களின் கருத்துகளைக் கேட்டு செயல்படுத்த விழைகிறோம். அதற்கான பெற்றோர் கருத்தாய்வை (Parents Feedback Survey) ஓரிரு நாளில் பகிரவுள்ளோம்.  அனைவரும் அதை நிரப்பி உங்கள் குரலை எங்களிடம் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிரப்பி அனுப்புவதற்கான கடைசி நாள்: ஜூன் 15, 2021


வ.த.மை கலைப்பெட்டகம்

நம் பள்ளியின் YouTube வலையொளியில் 13 புதிய கலைப்பெட்டக காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. மழலை நிலை குழந்தைகளின் கதைகள் முதல் நிலை 6 குழந்தைகளின் ஐம்பெரும் காப்பியங்களோடு, கலை, பாடல், ஆடல் என்று ஒரு பல்சுவை விருந்து உங்களுக்காக காத்திருக்கிறது. கண்டுகளியுங்கள்!!


வாரம் ஒரு குறள்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (504)  

ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.