Google classroom file upload guidelines

Students should strive hard and complete their homework in the allotted time. That will pave the way for regular and timely feedback from the teachers. Staggering the homework results in more work for the teachers and students.

We request utmost cooperation from parents and students in this regard.

We have also developed some guidelines to follow for homework submission (files, video or audio) through google classroom. We recommend that you read, understand and adhere to those guidelines listed on our website here.


Book mailing update

VTA has completed the book and supplies distribution to all the Nilai’s. We appreciate everybody’s patience and cooperation through this time. If you haven’t received your books and supplies yet, please send an email to help@valluvantamil.org


Volunteer sign up & Feedbacks

Room Parents – please click to signup for the Room Parents’ role

Cultural committee/Events – Parents interested in contributing to cultural committee/events, please send an email to help@valluvantamil.org

VTA books – please share your feedback through the Google form link.

Weekly communication – please click here and share your thoughts.


Regular Class

Saturday, Nov 07, 2020 
Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Kural for the week

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. (595) 

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள நீர்ப்பூக்களின் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின்படியே இருக்கும்.

The stalks of water-flowers are proportionate to the depth of water. Similarly, a person’s greatness is proportionate to their motivation and drive to get better


கூகிள் வகுப்பறையில் வீட்டுப்பாடம் பதிவேற்றம்

ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் குழந்தைகள் வீட்டுப்பாடம் முடிக்க முற்பட வேண்டும்.  ஆசிரியர்கள் அதனை திருத்தி அவர்கள் பின்னூட்டத்தை வழங்க ஏதுவாக இருக்கும். காலம் கடந்து பதிவேற்றினால் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிரமம் கூடுகிறது.

இந்த விஷயத்தில்  பெற்றோர் மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்பு கண்டிப்பாக தேவை. 

வீட்டுப்பாடத்திற்கான கோப்புகள், காணொளிகள், மற்றும் ஒலி கோப்புகள் பதிவேற்றுவதற்கு சில பரிந்துரைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து, பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நூல்களை அஞ்சல் வழியாக அனுப்புதல்

அனைத்து குழந்தைகளுக்கும் புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இத்துடன் புத்தகம் மற்றும் பிற பள்ளிப்பொருட்கள் விநியோகம் நிறைவுபெற்றது. பெற்றோர்களின் ஒத்துழைப்பிற்கும், பொறுமைக்கும் நன்றி.  இன்னும் புத்தகங்கள் கிடைக்கப்பெறாமல் இருப்பவர்கள் உதவி@வதமைக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


தன்னார்வலத்தொண்டு & பின்னூட்டங்கள்

வகுப்பறை பெற்றோராக விருப்பம் இருப்பவர்கள் இங்கே பதிவு செய்யவும்.

வ.த.மை கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகள் குழுவில் விருப்பம் இருப்பவர்கள் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வ.த.மை பாடநூல்கள் மற்றும் பயிற்சிநூல்கள் குறித்த உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகுள் படிவத்தில் தெரிவிக்கவும்.

வாராந்திரத் தகவல் தொடர்பு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.


வாராந்திரவகுப்புகள்

சனி,நவம்பர் 7, 2020

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம். 


வாரம் ஒரு குறள்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. (595) 

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள நீர்ப்பூக்களின் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின்படியே இருக்கும்

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!