VTA President’s Thanksgiving message

Happy Thanksgiving to everybody! Please listen to our school president’s Thanksgiving message in this link.  


No Regular Class

Saturday, Nov 28, 2020 
No online classes this week (Nov 28) for Thanksgiving weekend.

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


VTA Virtual Thamizh fair

VTA is preparing to have a Virtual Tamizh Fair during January (during Thamizhar Thirunaal). We need two parent volunteers from each class who can coordinate. We request the parents to come forward to help. Interested parents – please send email to cultural committee


Washington Thamizh Sangam Thamizh music event

Thamizh Sangam’s 11th thamizh music festival is coming up on December 13th. It will be conducted virtually this year. Please encourage your kids to participate. For more details, please check here.

Last date for registration is December 05, 2020  


Volunteer sign up & Feedbacks

Room Parents – please click to signup for the Room Parents’ role

Cultural committee/Events – Parents interested in contributing to cultural committee/events, please send an email to help@valluvantamil.org

VTA books – please share your feedback through the Google form link.

Weekly communication – please click here and share your thoughts.


Kural for the week

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (314) 

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.  

The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides


வ.த.மை தலைவரின் நன்றி நவிலல் உரை

அனைவருக்கும் நன்றி நவிலல் வாழ்த்துகள்!  நம் பள்ளி தலைவரின் இரண்டு நிமிட சிற்றுரையை இங்கே கேட்கலாம்.


வாராந்திரவகுப்புகள்

சனி,நவம்பர் 21, 2020

நன்றி நவிலல் (Thanksgiving) விடுமுறையை முன்னிட்டு  வ.த.மை வகுப்புகள் இல்லை. 

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம். 


வ.த.மை இணையவழித் தமிழ்க்கண்காட்சி

தமிழர் திருநாளை முன்னிட்டு சனவரியில் இணையவழித் தமிழ்க்கண்காட்சி நடத்த ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இதை முன்னெடுக்க ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் இரண்டு பெற்றோர்களின் உதவி தேவை. முன்வந்து உதவுமாறு பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறோம். பெற்றோர்களின் விவரங்களை கலை-பண்பாட்டுக்குழுவுக்குத் மின்னஞ்சல் அனுப்புங்கள்.


தமிழ்ச்சங்கத்தின் தமிழிசை விழா

11ஆம் ஆண்டு தமிழிசை விழா டிசம்பர் 13 ஆம் தேதி இணையவழியில்  நடைபெறவுள்ளது. உங்கள் குழந்தைகளை விழாவில் பங்கேற்க ஊக்கப்படுத்துங்கள்.  நிகழ்ச்சி விதிமுறைகளுக்கும், பதிவுப்படிவத்திற்கும் இங்கே பார்க்கவும்.

பதிவு செய்ய கடைசி தேதி: டிசம்பர் 5.


தன்னார்வலத்தொண்டு & பின்னூட்டங்கள்

– வகுப்பறை பெற்றோராக விருப்பம் இருப்பவர்கள் இங்கே பதிவு செய்யவும்.

வ.த.மை கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகள் குழுவில் விருப்பம் இருப்பவர்கள் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வ.த.மை பாடநூல்கள் மற்றும் பயிற்சிநூல்கள் குறித்த உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகுள் படிவத்தில் தெரிவிக்கவும்.

வாராந்திரத் தகவல் தொடர்பு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.


வாரம் ஒரு குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
. (314) 

நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே  

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!