Winter break

There will be no classes this week due to the Winter break.  Regular classes will resume on January 9, 2021.

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


VTA 10th year anniversary celebrations

Thamizh fair celebration

Thamizh fair celebrations are scheduled for 23rd January 2021.  Recorded videos will be telecasted through a YouTube Live event.  The last day to submit videos for the event is January 3rd.  We request all parents to reach out to their kids’ class teachers and volunteer their names for the event. Depending on the duration of the program, we will split them into a 2 days event. For further details, please email culturalleads@valluvantamil.org.


Thamizh Sangam Thirukkural essay competition

Tamil Sangam of Greater Washington is welcoming submissions for their Thirukkural essay competition. The last date for sending your submissions is January 31, 2021. Please click this link for additional details. 


Are you interested in video editing?

Due to the new normal conditions this year, we are looking for volunteers who can help us with video editing, watermarking and program compiling. Interested folks, please email culturalleads@valluvantamil.org


VTA graduation 2019-20 virtual event

The felicitation event for VTA graduates in the past academic year was conducted last Saturday.  The recording of the program can be viewed by clicking here (check this link). Thank you to all those who joined and congratulated the graduates!


Volunteer sign up & Feedbacks

Room Parents – please click to signup for the Room Parents’ role

Cultural committee/Events – Parents interested in contributing to cultural committee/events, please send an email to help@valluvantamil.org

VTA books – please share your feedback through the Google form link.

Weekly communication – please click here and share your thoughts.


Kural for the week

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. (74)
  

 குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும். 

Love begets desire: and that (desire) begets the immeasurable excellence of friendship.


குளிர்கால விடுமுறை

குளிர்கால விடுமுறையை முன்னிட்டு, அடுத்த மூன்று வாரங்கள் வகுப்புகள் நடைபெறாது.  வகுப்புகள் சனவரி 9ஆம் தேதியிலிருந்து மீண்டும் தொடங்கும்

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம்.


வ.த.மை இணையவழித்தமிழ்க்கண்காட்சி

தமிழர் திருநாளை முன்னிட்டு இணையவழித் தமிழ்க்கண்காட்சி சனவரி  23ஆம் தேதி நடைபெறவுள்ளது.  முன்பதிவு செய்யப்பட்ட காணொளிகள் Youtube நேரலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படும்.  காணொளிகள் அனுப்ப கடைசி நாள் சனவரி 3, 2021. பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளின் ஆசிரியரிடம் கேட்டு முன்வந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  நிகழ்ச்சியின் காலநேரத்தைப் பொறுத்து 2 பாகங்களாகப் பிரித்து இணையவழியில் அரங்கேற்றப்படும். மேலும் விவரங்களுக்கு கலை-பண்பாட்டுக்குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்


தமிழ் சங்கம் திருக்குறள் கட்டுரை போட்டி

வாஷிங்டன் வட்டார தமிழ் சங்கத்தின்  திருக்குறள் கட்டுரை போட்டிக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகள் அனுப்ப கடைசி நாள் சனவரி  31, 2021. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.


உங்களுக்கு  காணொளிகள் எடிட் செய்ய விருப்பம் உள்ளதா?

இந்த வருடம் நம் பள்ளி நிகழ்வுகள் பல இணையவழியில்  நடைபெறவுள்ளதால் காணொளிகள் எடிட் செய்து, தொகுத்து, நேர்த்தியாக வடிவமைக்க தன்னார்வலர்கள் தேவை. விருப்பம் உள்ளவர்கள் கலை-பண்பாட்டுக்குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


வ.த.மை பட்டதாரிகள் 2019-20 பாராட்டு விழா

சென்ற வாரம் 2019-20 வ.த.மை பட்டதாரிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் பதிவை இங்கே (add link) காணலாம்.  நிகழ்ச்சியில் பங்குபெற்று குழந்தைகளை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி


தன்னார்வலத்தொண்டு & பின்னூட்டங்கள்

– வகுப்பறை பெற்றோராக விருப்பம் இருப்பவர்கள் இங்கே பதிவு செய்யவும்.

வ.த.மை கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகள் குழுவில் விருப்பம் இருப்பவர்கள் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வ.த.மை பாடநூல்கள் மற்றும் பயிற்சிநூல்கள் குறித்த உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகுள் படிவத்தில் தெரிவிக்கவும்.

வாராந்திரத் தகவல் தொடர்பு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.


வாரம் ஒரு குறள்

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. (74) 

குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!