Picture Day !!!

VTA Picture day is on Feb 5th and Feb 12th. We will be taking pictures of the students. So Please make sure that the video camera in students laptop is working. We request parents to help their children login with their TAMIL NAME and sit in a chair to get their face clearly in the picture.


VTA YEAR BOOK 2022!!!

Students contributions are invited for Year book. Please send stories, articles or drawings that exhibit greatness of Tamil and its culture. You could also send write ups describing your journey with VTA. Last day to send your articles is March 11, 2022.

We need Volunteers to help us in coordination efforts and editing of the Year book. If you are interested to be part of the yearbook team, please send us email to HELP.


Cultural Events !!!

Thanks to all Volunteers, Parents and Student participants, we were able to conduct online Arts competition successfully. Results will be announced in 2 weeks. We are planning to conduct Thirukkural and Athichudi competitions on March 12th. Registrations will begin on 7th Feb 2022.

Tamil fair will be conducted online on Feb 12th and 19th at 4:30 pm through YOUTUBE Live. Please check here for more information on Tamil fair.


Book Feedback !!!

Please share your feedback on this year’s lesson and homework books with your teachers. Your feedback will help us to improve the quality of the books.


Next Online class is on – 05th Feb 2022

All classes will be conducted online.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30


Thirukkural Essay Competition!!!

Greater Washington Tamil Sangam is conducting Thirukkural Essay writing competition for High school students this year. Please encourage your students to participate in this competition. For more details check this webpage.


Kural for the week

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
(522)

அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

If (a man’s) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever-increasing wealth.


புகைப்பட நாள் !!!

பிப்ரவரி 5 மற்றும் பிப்ரவரி 12 ஆம் தேதிகளில் மாணவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்படும். மாணவர்கள் கணினியில் புகைப்படக் கருவி தயார் நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

நன்கு முகம்தெரியும்படி நாற்காலியில் அமரவும், குழந்தைகள் தங்களின் தமிழ்ப்பெயரில் வகுப்புகளுக்கு இணையவும் பெற்றோர்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


பள்ளியின் ஆண்டு மலர்!!!

பள்ளியின் ஆண்டு மலருக்கு மாணவர்களின் படைப்புகள் வரவேற்கப்படுகின்றது. தமிழின் சிறப்பை வெளிப்படுத்தும் கதை, கட்டுரைகள், ஓவியங்கள் மற்றும் தமிழ்பள்ளியில் உங்கள் அனுபவப் பதிவுகளை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசி நாள் மார்ச் 11,2022.

பள்ளியின் ஆண்டு மலரை தொகுப்பதற்கு தன்னார்வலர்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


கலை நிகழ்ச்சிகள் !!!

இணையத்தின் மூலம் சித்திரப் போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கும், வெற்றிகரமாக நடைபெற உதவிய பெற்றோர்களுக்கும்,தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.இன்னும் சில வாரங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்

திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டிகள் மார்ச் மாதம் 12ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. போட்டிக்கு உங்கள் குழந்தைகளை பிப்ரவரி 7ஆம் தேதியில் இருந்து பதிவு செய்யலாம்.

தமிழ்க்கண்காட்சி பிப்ரவரி மாதம் 12 மற்றும் 19 தேதிகளில் மாலை 4:30 மணிக்கு YOUTUBE Live மூலம் நடக்க உள்ளது. தமிழ்க்கண்காட்சி விவரங்களுக்கு வலைப்பக்கத்தை காணவும்.


புத்தகங்களுக்கான பின்னூட்டம்!!!

உங்கள் குழந்தைகளின் பாடநூல் மற்றும் பயிற்சிநூல் குறித்த நிறை குறைகளை உங்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் தெரியப் படுத்தவும். உங்கள் பின்னூட்டம் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.


அடுத்த வாராந்திர வகுப்பு – 02/05/2022

அனைத்து வகுப்புகளும் இணைய வழியில் தொடரும்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை


திருக்குறள் கட்டுரைப்போட்டி!!!

வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் கட்டுரைப்போட்டி நடத்துகிறது. மேலும் விபரங்களுக்கு இந்த தளத்தைப் பார்க்கவும்.


வாரம் ஒரு குறள்

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
(522)

அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.