முக்கியமான தகவல்கள்
வகுப்புகள் – மாரச் 14, 2026
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்:
மார்ச் 14
மார்ச் 21 ( VTA தமிழ்த் தேனீ போட்டி – வகுப்பறைகளில் நடைபெறும்)
வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 16 வது ஆண்டு விழா மே 30, 2026
வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா பதிவு செய்ய இணைப்பு திறக்கப் பட்டுவிட்டது .
பதிவு செய்ய –MyValluvanTamil->Cultural Events->Annual Day
விதிமுறைகளை இங்குக் காணலாம். உங்கள் குழுக்களை விரைந்து பதிவு செய்யவும்.இடம் : Oakton High School
MC/VTA பாட்டு நிகழ்ச்சிற்கான பதிவு
MC/VTA பாட்டு ஆண்டு விழா நிகழ்ச்சிற்கான பதிவு தொடங்கிவிட்டது. இவற்றில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் இங்கே பதிவு செய்யவும்
வள்ளுவன் தமிழ் மையம் ஆண்டு விழாவிற்கான 2026 – தன்னார்வலர்கள் தேவை!!
வள்ளுவன் தமிழ் மையம் (VTA) தனது ஆண்டு விழாவை சனிக்கிழமை, மே 30, 2026 அன்று கொண்டாட உள்ளது. இந்த விழாவிற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஆண்டு விழாவிற்கான பல்வேறு குழுக்களுக்கு தன்னார்வலர்கள் தேவை. தயவுசெய்து ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இங்கே பதிவு செய்யவும்.
VTA தமிழ்த் தேனீ போட்டி – மார்ச் 21, 2026
தமிழ்த் தேனீ போட்டி மார்ச் 21, 2026 அன்று மாணவர்கள் படிக்கும் தங்களது வகுப்பறைகளில் நடைபெறும். இந்தப் போட்டியில் எல்லா மாணவர்களும் பங்கேற்க தகுதியானவர்கள்.
குழந்தைகளுக்காக சொல் பட்டியலை எளிமைப்படுத்துவதற்கு நாங்கள் மிகுந்த முயற்சி எடுத்துள்ளோம். எனவே, எல்லா குழந்தைகளையும் போட்டியில் பங்கேற்க ஊக்குவிக்கவும்.
சொல் பட்டியல் மற்றும் வழிகாட்டுதல்களைக் காண இங்கே சொடுக்கவும்
“தமிழ் சொற்களை அறிந்து, தன்னம்பிக்கையுடன் பயன்படுத்தக் கற்றுத்தரும் மொழி வளர்ப்பு போட்டி”
தேர்தல் செயல்முறைக் கூட்டம்
தேர்தல் செயல்முறை மற்றும் மாற்றங்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள தேர்தல் குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த ஆண்டு தேர்தல் குழுவின் ஏற்பாட்டில் 4 இயக்குனர்கள் குழு பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும்
நாள்: ஏப்ரல் 7 செவ்வாய் கிழமை
இணையவழி கூட்டம் – ஏப்ரல் 7, 2026, இரவு 8:30
பதவி / Position
துணை செயலாளர் / Joint Secretary – 2 Years
பொருளாளர் / Treasurer – 2 Years
பெற்றோர் பிரதிநிதி / Parents Representative – 2 Years
ஆசிரியர் பிரதிநிதி / Teachers Representative – 2 Years
County Credit முடிவுகளைப் பதிவு செய்ய!!!
உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்
FETNA – தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்
FETNA – தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்
இந்த போட்டியில் பங்குபெற விரும்புவோர், விவரங்களைக் காண இங்கே சொடுக்கவும்.
வாரம் ஒரு குறள்
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. (381)
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.
He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.
Important Information!!!
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
Next few school days:
March 14
March 21 – VTA Tamil Theni competition – Respective classroom
Valluvan Tamil Academy – 16th Annual Day celebration May 30th, 2026
Valluvan Tamil Academy’s Annual day cultural registration is open.
To Register your Team, Myvalluvantamil->Cultural Events->Annual Day
Please check the guidelines here.
Register your team as soon as possible.
Place: Oakton High School
MC/VTA Song Registration
MC/VTA Song registration started for Annual day event.
Interested students please register here.
Annual Day 2026 – Volunteers sign up
Valluvan Tamil Academy (VTA) will be celebrating its Annual Day on Saturday, May 30th, 2026.
We are looking for enthusiastic volunteers to help various tasks for Annual day.
Interested volunteers, please sign up here.
VTA Tamil Theni Competition – March 21, 2026
Tamil Theni competition will be held on March 21, 2026 in their respective classrooms and all the kids are eligible to participate in this competition. We made a great effort to simplify the word list for kids, please encourage all our kids to participate in the competition. Word list and guidelines are available in our website. Click Here.
Tamil Theni competition that helps children learn Tamil words/Vocabulary and use them with confidence.
Election Process Meeting
To share the election process and updates with the members, the Election Committee will be conducting a meeting. This year, an election will be held for 4 Board Member positions, organized by the Election Committee.
Date: Tuesday, April 7 Online Meeting – April 7, 2026, 8:30 PM
Positions
- Joint Secretary – 2 Years
- Treasurer – 2 Years
- Parents’ Representative – 2 Years
- Teachers’ Representative – 2 Years
County Credits Result!!!
If your kids took Tamil County credit exams please record them @myvalluvan.org. Please follow the steps provided in this document to record the credits.
FETNA – National‑level Kural Theni Competitions.
FETNA – National‑level Kural Theni Competitions.
Those who wish to participate in this competition, please click here to view the details.
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. (381)
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.
He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.
