முக்கியமான தகவல்கள்


வகுப்புகள் – ஏப்ரல் 25 – (வழக்கமான வகுப்புகள் நடைபெறாது)

VTA தன்னார்வலர்களுக்கான பாராட்டு மதிய விருந்து (11:30am – 1:30pm) மற்றும் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா (2:00pm – 5:00pm)

இனி வரும் பள்ளி நாட்கள்:

மே 2

மே 9 – இணையவழி வகுப்புகள் (Google Classroom)

பள்ளியின் நாட்காட்டி


VTA விருது வழங்கும் விழா – ஏப்ரல் 25, 2026 2PM

அன்பார்ந்த அனைவருக்கும்,

வரும் 25 ஏப்ரல் 2026 (சனிக்கிழமை) அன்று, மதியம் 2 மணிக்கு, Rocky Run Middle School வளாகத்தில் நடைபெறும் VTA விருது வழங்கும் விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள விருதுகளின் பிரிவுகள்

பின்வருமாறு:

  1. பேச்சுப் போட்டி
  2. விவாதப் போட்டி
  3. கட்டுரை போட்டி
  4. தமிழ்த் தேனீ போட்டி
  5. விளம்பர வேளை போட்டி(Adzap)
  6. திருக்குறள் போட்டி
  7. ஆதிச்சூடி போட்டி
  8. TVA தேர்வு – 2025
  9. 2025–2026 FCPS/LCPS கவுண்டி கிரெடிட் தேர்வு

மேலே குறிப்பிடப்பட்ட போட்டிகள் அல்லது தேர்வுகளில் உங்கள் குழந்தை வெற்றி பெற்றிருந்தால், நிச்சயமாக பாராட்டுக்குரியவர். அவர்களின் சாதனையை கொண்டாடும் இந்த அழகான தருணத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் கோப்பையும் பாராட்டையும் பெற வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், வாரந்தோறும் ஆசிரியர்களுக்கு உதவி செய்து, பல்வேறு நிகழ்வுகளில் VTA-க்கு ஆதரவளித்த மாணவர் தன்னார்வலர்களுக்கும் சிறப்பு பாராட்டுகள் வழங்கப்பட உள்ளன.

எனவே, இந்த விழாவிற்கு வருகை தந்து, எங்கள் திறமையான மாணவர்களை வாழ்த்தி, அவர்களின் சாதனைகளை கொண்டாடுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 16 வது ஆண்டு விழா மே 30, 2026

இடம் : Oakton High School


ஆண்டு விழா உணவு  முன்பதிவு    

ஆண்டு விழா உணவுச்சீட்டு பதிவு தொடங்கிவிட்டது, அருமையான உணவை உண்டு மகிழ, விரைந்து முன்பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்கே சொடுக்கவும்


வள்ளுவன் தமிழ் மையம் ஆண்டு விழாவிற்கான 2026 – தன்னார்வலர்கள் தேவை!!

வள்ளுவன் தமிழ் மையம் (VTA) தனது ஆண்டு விழாவை சனிக்கிழமை, மே 30, 2026 அன்று கொண்டாட உள்ளது. இந்த விழாவிற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஆண்டு விழாவிற்கான பல்வேறு குழுக்களுக்கு தன்னார்வலர்கள் தேவை. தயவுசெய்து ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இங்கே பதிவு செய்யவும்.


அச்சுப்பொறி (Printer) நன்கொடை!!

VTA பள்ளிக்கு ஒரு அச்சுப்பொறி (பிரிண்டர்) நன்கொடையாக வழங்க ஆர்வமுள்ளவர்கள் இருந்தால், நிர்வாகக்குழு (Board@valluvantamil.org) உறுப்பினர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஆதரவு எங்கள் மாணவர்களுக்கும் பள்ளி செயல்பாடுகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.


வாரம் ஒரு குறள்

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. (431)

இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Weekly class – April 25 – (No Regular school)

Volunteer Appreciation Luncheon (11:30am – 1:30pm)

Students Award Ceremony (2:00pm – 5:00pm)

Next few school days:

May 2

May 9 – Online School (Google classroom)

School Calendar


VTA award ceremony – 04/25/2026 – Rocky Run Middle School at 2 PM.

We would like to invite you all for the VTA award ceremony on 04/25/2026 at Rocky Run Middle School at 2 PM.

Please find the categories that we will be distributing awards.

1) Speech Competition

2) Debate Competition

3) Essay Competition

4) Tamil Bee Competition

5) Adzap Competition

6) Thirukkural Competition

7) Aathichoodi Competition

8) TVA Exam in 2025

9) 2025-2026 FCPS/LCPS County credit exam.

If your kid had won in any of the above competitions or the exams listed above, then surely he/she deserves an applause and an amazing trophy, this is the time to celebrate them.

Also, we have special mentions for the student volunteers who are all assisting the teachers every week and also supported VTA in various events. So, please join us and grace the award ceremony and celebrate our wonderful students.


Valluvan Tamil Academy – 16th Annual Day celebration May 30th, 2026

Place: Oakton High School


Annual Day 2026 – Volunteers sign up

Valluvan Tamil Academy (VTA) will be celebrating its Annual Day on Saturday, May 30th, 2026.

We are looking for enthusiastic volunteers to help various tasks for Annual day.

Interested volunteers, please sign up here.


Annual Day Food Reservation

Food ticket reservations for Annual Day have now opened. To enjoy the delicious meal, we kindly request you to make your reservation at the earliest.

Click here


Printer Donation

Our VTA school is currently looking for a printer donation. If anyone is interested in supporting us, please contact the Board (board@valluvantamil.org). Your help will be greatly appreciated.


Kural for the week

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. (431)

இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.