முக்கியமான தகவல்கள்


வகுப்புகள் – மே 2

நிலை 3, 6, 9 மாணவர்களுக்கு TVA தேர்வு நடைபெறும்.

மற்ற நிலைகளுக்கு வழக்கமான வகுப்புகள் நடைபெறும்; சில நிலைகளுக்கு மட்டும் தேர்வுகள் இருக்கும்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

மே 9 – இணையவழி வகுப்புகள் (Google Classroom)

மே 16 – வழக்கமான வகுப்புகள் நடைபெறும்; ஆண்டு விழா முன்பயிற்சியும் நடைபெறும்

பள்ளியின் நாட்காட்டி


வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – 16 வது ஆண்டு விழா மே 30, 2026

இடம் : Oakton High School


ஆண்டு விழா உணவு  முன்பதிவு    

ஆண்டு விழா உணவுச்சீட்டு பதிவு தொடங்கிவிட்டது, அருமையான உணவை உண்டு மகிழ, விரைந்து முன்பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்கே சொடுக்கவும்


வள்ளுவன் தமிழ் மையம் ஆண்டு விழாவிற்கான 2026 – தன்னார்வலர்கள் தேவை!!

வள்ளுவன் தமிழ் மையம் (VTA) தனது ஆண்டு விழாவை சனிக்கிழமை, மே 30, 2026 அன்று கொண்டாட உள்ளது. இந்த விழாவிற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஆண்டு விழாவிற்கான பல்வேறு குழுக்களுக்கு தன்னார்வலர்கள் தேவை. தயவுசெய்து ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இங்கே பதிவு செய்யவும்.


வள்ளுவன் தமிழ் மையத்தின் 2026–2027 கல்வியாண்டிற்கான பதிவு

வள்ளுவன் தமிழ் மையத்தின் 2026–2027 கல்வியாண்டிற்கான பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து உங்கள் குழந்தைகளை முன்கூட்டியே பதிவு செய்து ‘Early‑bird’ சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.


அச்சுப்பொறி (Printer) நன்கொடை!!

VTA பள்ளிக்கு ஒரு அச்சுப்பொறி (பிரிண்டர்) நன்கொடையாக வழங்க ஆர்வமுள்ளவர்கள் இருந்தால், நிர்வாகக்குழு (Board@valluvantamil.org) உறுப்பினர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஆதரவு எங்கள் மாணவர்களுக்கும் பள்ளி செயல்பாடுகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.


வாரம் ஒரு குறள்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். (441)

அறமுணர்ந்தமூதறிஞர்களின்நட்பைப்பெறும்வகைஅறிந்து, அதனைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Weekly class – May 2, 2026

3, 6 and 9 graders will take the TVA exam.

Others will have regular classes and few classes have exams in their classroom.

Morning session: 10:30am – 12:30pm

Afternoon Session: 1:30pm – 3:30pm

Next few school days:

May 9 – Online School (Google classroom)

May 16 – Regular school and Annual Day Rehearsal.

School Calendar


Valluvan Tamil Academy – 16th Annual Day celebration May 30th, 2026

Place: Oakton High School


Annual Day 2026 – Volunteers sign up

Valluvan Tamil Academy (VTA) will be celebrating its Annual Day on Saturday, May 30th, 2026.

We are looking for enthusiastic volunteers to help various tasks for Annual day.

Interested volunteers, please sign up here.


Annual Day Food Reservation

Food ticket reservations for Annual Day have now opened. To enjoy the delicious meal, we kindly request you to make your reservation at the earliest.

Click here


Valluvan Tamil Academy’s School Registration 2026-2027

Valluvan Tamil Academy’s registration for the 2026–2027 school year is now open. We encourage all parents to register early and take advantage of the early‑bird discount. Please click here to complete your registration.


Printer Donation

Our VTA school is currently looking for a printer donation. If anyone is interested in supporting us, please contact the Board (board@valluvantamil.org). Your help will be greatly appreciated.


Kural for the week

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். (441)

அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.