முக்கியமான தகவல்கள்!!!
ஜூன் 8, பள்ளியின் கடைசி நாள்
ஆண்டு விழா!!!
ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், விழா சிறப்பாக நடைபெற உதவிய தன்னார்வலர்களுக்கும் நிர்வாகக் குழுவின் மனமார்ந்த நன்றி!!! எங்கள் பட்டதாரி மாணவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்!!!
Trophy collection!!!
ஜூன் 8, மாணவர்கள் தங்களது கோப்பைகளை பெற்றுக்கொள்ள கடைசி நாள். நீங்கள் இல்லை என்றால், உங்கள் சார்பாக உங்கள் நண்பர்களை பெற்று கொள்ளுமாறு கூறவும். இல்லையெனில், இந்த கோப்பைகள் அடுத்த ஆண்டுக்கு மறுசுழற்சி செய்யப்படும். மாணவர்களின் கட்டுரைகளும் அன்று திருப்பித் தரப்படும். |
அடுத்த கல்வி ஆண்டுக்கான பதிவு!!!
அடுத்த கல்வியாண்டுக்கான பதிவு திறக்கப்பட்டுள்ளது. நிர்வாகக்குழு அனைத்து பெற்றோர்களையும் முன்கூட்டியே பதிவு செய்து, ஆரம்பகால சலுகையைப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறது. ஆரம்பகால சலுகை ஜூலை 31 அன்று முடிவடைகிறது. நீங்கள் விரைவில் பதிவு செய்தால் வகுப்பு ஒதுக்கீடு செய்ய எங்களுக்கு ஏதுவாக இருக்கும். உங்கள் குழந்தைகளை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்
பட்டப்படிப்பு சான்றிதழ்கள் பெறுதல்!!!
ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு, பட்டமளிப்புச் சான்றிதழைப் பெறத் தவறியவர்கள், ஜூன் 8 ஆம் தேதி, 1:30 க்கு ராக்கி ரன் பள்ளி முன் மேசையில் பெற்றுக்கொள்ளவும் அல்லது உங்கள் சார்பாக உங்கள் நண்பர்களிடம் அதைப் பெற்றுக் கொள்ளச் சொல்லவும்.
பெற்றோர்கள் கருத்துக் கணிப்பு!!!
விரைவில் பெற்றோர்கள் கருத்துக் கணிப்பு வெளியிடப்படும். தயவு செய்து அனைவரும் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்தி பள்ளி செயல்முறைகளை மேம்படுத்த எங்களுக்கு உதவுங்கள்.
வகுப்புகள் – ஜூன் 8 ,2023
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்
வாரம் ஒரு குறள்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. (261)
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Jun 8th Last Day of School!!!
Annual Day!!!
Congratulations to all Students who participated in our Annual day. Congrats to our graduates! Our heartfelt thanks to all volunteers who made this event a great success.
Trophy Collection!!!
June 8th is the last day to collect trophies for this year. In case if you are not available make sure your friends can collect on your behalf. These trophies will be recycled for next year and you may not be able to claim these trophies again. Student’s Essays will be returned on the same day.
Next School year Registration is open!!!
Registration is open for next academic year. VTA Board requests all the parents to register early and avail early bird offer. Early bird offer ends July 31. Please register soon to help us with class allocations. Click here to register your kids.
Graduation Certificates Collection!!!
If you missed to attend and collect your graduation certificate on annual day, please collect it on 8th June from 1:30 pm at Rocky Run school front desk or please ask your friends to collect it on your behalf.
Parents Feedback Survey!!!
Soon parents feedback survey will be released. Please everyone let us know your feedback and help us in improving the processes for school
Weekly classes – 8th Jun 2024
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
To see the upcoming school days and important school events click here.
Kural for the week
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. (261)
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to other.