Online classroom etiquette

In this current online learning environment, it is imperative that parents and students cooperate with the teachers for the smooth functioning of classes.

Specifically, students should have their cameras on for the entire duration of the class. We sincerely request the parents to provide good technology tools to meet that requirement and enable a conducive learning atmosphere at home. Please review this link for additional details on online classroom etiquette.

It is equally important for parents to spend time with your kids, help them with the homework, and Thamizh school-related activities.  


Google classroom file upload guidelines

We have developed some guidelines to follow for homework submission (files, video, or audio) through google classroom. We recommend that you read, understand, and adhere to those guidelines listed on our website.


VTA Cultural Events announcement

Notwithstanding the COVID19 situation, VTA would like to conduct some cultural events. As the first step to this effort, we request all the parents to ensure their kid’s age is reported correctly on my.valluvantamil.org. Please also ensure that each parent has their own email and phone number listed in the system without fail.

Please refer to the HOW TO document, if you need assistance in updating the information in the database.


Please signup for Room parents’ role

We request and encourage the parents to signup for the Room Parents’ role, which will help the teachers to run the online classes smoothly and also to coordinate with other parents in the classroom for classroom activities.


Regular Class

Saturday, Oct 31, 2020 
Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

Please share your feedback on VTA books in the Google form link here.


We value your feedback on Weekly communication, please click here and share your thoughts.


Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Kural for the week

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619) 

கடவுளும், விதியும்நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்

Even if God or destiny is not on your side during tough situations, your hard work and efforts always pay off.


இணையவழி வகுப்பு விதிமுறைகள் 

இணையவழி வகுப்புகள் சீராக நடக்க பெற்றோர் மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். குறிப்பாக, குழந்தைகள் வகுப்பு நேரம் முழுவதும் கணினி கேமராவை இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். பெற்றோர்கள் அதற்குண்டான தொழில்நுட்ப கட்டமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.  

குழந்தைகளின் கவனம் சிதறாமல் இருக்க ஏதுவான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.  

வீட்டுப்பாடம் மற்றும் புதிய விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க நேரம் செலவிட்டு ஆசிரியர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். 


வ.த.மை கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு

வ.த.மை. கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்த முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. தற்போதைய கோவிட் சூழலில் இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும்.

என் வள்ளுவன் வலைப்பக்கத்தில் குழந்தைகளின் வயது, பெற்றோர்களின் மின்னஞ்சல்/தொலைபேசி விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு “எவ்வாறு?” பார்க்கவும்.


கூகிள் வகுப்பறையில் வீட்டுப்பாடம் பதிவேற்றம்

வீட்டுப்பாடத்திற்கான கோப்புகள், காணொளிகள், மற்றும் ஒலி கோப்புகள் பதிவேற்றுவதற்கு சில பரிந்துரைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து, பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்


வகுப்பில் பெற்றோர் உதவி

வகுப்பில் பெற்றோர்களின் உதவி தேவை. விருப்பம் உள்ளவர்கள் இங்கே பதிவு செய்யவும். பெற்றோர்  ஒருங்கிணைப்பு மற்றும் இணையவழிக் கல்விக்கு   ஆசிரியர்களுக்கு உங்கள் சேவை இன்றைய தேவை.


வாராந்திரவகுப்புகள்

சனி, அக்டோபர் 31, 2020

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

வ.த.மை பாடநூல்கள் மற்றும் பயிற்சிநூல்கள் குறித்த உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகுள் படிவத்தில் தெரிவிக்கவும். நூல்களை மேலும் செம்மைப்படுத்த உங்கள் கருத்துகள் உதவியாக இருக்கும்


வாராந்திரத் தகவல் தொடர்பு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அவற்றை இங்கே பகிரவும்.  


வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம். 


வாரம் ஒரு குறள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619)  

கடவுளும், விதியும் நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!