முக்கியமான தகவல்கள்!!!

செப்டம்பர் 9 – பள்ளியின் முதல்நாள்!!!


பள்ளியின் முதல்நாள்!!!

புதிய கல்வியாண்டில் வள்ளுவன் தமிழ்ப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்துக்கள். மீண்டும்  அனைவரையும் சந்திப்பதில் வள்ளுவன் நிர்வாகக்குழு பெருமகிழ்ச்சி கொள்கிறது.

மாணவர்களுக்கு வாராந்திர வகுப்புகள் நடைபெறும். இந்த கல்வியாண்டின் முதல் நாளன்று (செப்டம்பர் 9 , சனிக்கிழமை) காலை 10:45 மற்றும் நண்பகல் 01:45க்கு பெற்றோருக்கான அறிமுக கூட்டம் பெற்றோர்களுக்கு மட்டும் பள்ளியில் நடைபெறும். தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மாணாக்கர்களின் வகுப்பு பற்றிய விபரங்கள் மற்றும் கூகுள் வகுப்பறையின் இணைப்பும் பெற்றோர்களுக்கு மின்னஞ்சலில் பகிரப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சல் உங்கள் இன்பாக்ஸில்  இல்லையெனில், ஸ்பேம் கோப்புகளில் தேடவும் அல்லது உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

ஆசிரியர் தன்னார்வலர்களுக்கும்   ஒதுக்கப்பட்ட வகுப்பு பற்றிய விபரங்கள் மின்னஞ்சலில் பகிரப்பட்டுள்ளது. . அந்த மின்னஞ்சல் உங்கள் இன்பாக்ஸில்  இல்லையெனில் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

ராக்கிரன் பள்ளியின் வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாக உள்ள காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் இணைந்து வரவும். வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் வரைபடத்தை இங்கு காணவும்


கல்வி ஆண்டுக்கான பதிவு!!!

இதுவரை உங்கள் குழந்தைகளை பதிவு செய்யவில்லை எனில் விரைந்து பதிவு செய்யுமாறு வள்ளுவன் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்.

Regular
Child 1$260
Child 2 onwards (Siblings discount)$230

தமிழ்ப் புத்தகங்கள் சேகரிக்கும் முன்னெடுப்பு!!!

Loudoun County  நூலகங்களுக்கு மறுபடியும் தமிழ்ப் புத்தகங்கள் சேகரிக்கும் முன்னெடுப்பு.  பெரியவர்களுக்கான புத்தகங்கள்   400 மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் 600 தேவைப்படுகிறது. நீங்கள் புதிய புத்தகமாகவோ, பணமாகவோ நன்கொடை அளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

புத்தகங்களை பள்ளியின் முதல் நாள் கொண்டு வந்து அதற்கென உள்ள பெட்டியில் இடவும்.

வகுப்புகள் – செப்டம்பர் 9, 2023

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


வாரம் ஒரு குறள்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
. (398) 

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

September 9 – first day of School


First Day of School!!!

Our wishes to all the students attending VTA this new academic year. VTA board is excited to meet each and every one of you in person.

Students will have their regular classes. Parents Orientation sessions will be conducted on the first day of school (September 9) at 10:45am and 01:45pm. for all parents. Please attend the session without fail.

All parents should have received the class allocation email for all your kids registered for this school year. Please check spam folders or send email to HELP.

Teacher volunteers should have received class allocation email as well. If you opted to volunteer as a teacher and you haven’t received any email, please reach out to HELP.

We have limited parking space in Rocky Run Facility. Hence we encourage you to carpool with your neighbors. Please check the map to see the entry and exit to the parking  lot.


School Registration is open!!!

Registration is OPEN for this academic year. VTA Board requests all the parents to register to register their students!!! Click here to register.

Regular
Child 1$260
Child 2 onwards (Siblings discount)$230

Tamil Books restocking Initiative!!!

Loudoun county libraries need 400 adult books and 600 kids books to replace the existing books. You can donate new books or cash for this initiative. Click here for more information.

Please bring the books on first day of the school and place it in the bin provided near front desk.


Weekly classes –9th Sep  2023

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Check here for School Calendar


Kural for the week

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
. (398) 

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.