Mandatory Parents Orientation Session

Date: September 11, 2021; Time: 11:30 – 1pm 

Zoom meeting invites and link was shared by the VTA President on September 7. We strongly recommend that you join the information session.


Weekly classes

First day of school: September 11

Classes type: Online

With the parents orientation scheduled on the same day, the class timings are slightly changed only for this week. Please take note below.

Morning sessions: 10:30 – 11:30 am

Afternoon sessions: 2:30 – 3:30 pm


Students Class Allocation

All parents can see their kids class details by logging into MY VALLUVAN (School – Class List). The google class code is also provided there. Zoom invitation details to join the classes for Saturday will be emailed by the respective class teachers. 


Attention all members!

All parents, please take a moment to visit   MY VALLUVAN to update your student e-mail,  mailing address, and phone number. Click here for HOW TO?

It is important for the student to join the online class. Please check this page for the  Instructions and FAQ for the online-class.  Note – The students’ e-mail should not be the same as the parents’ e-mail address.

 


Kural for the week

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
(602)

தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர  வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

All those who desire that their family may be illustrious should put away all idleness from their conduct.


பெற்றோர் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய தகவல் பரிமாற்ற அமர்வு/கூட்டம்

தேதி: செப்டம்பர் 11, 2021; நேரம்: 11:30 – 1:00 வரை

பெற்றோர்  தகவல் பரிமாற்ற கூட்டத்திற்கான இணைப்பு தகவல்கள் செப்டம்பர் 7ஆம் தேதி பள்ளித் தலைவர் அனுப்பினார். தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


வாராந்திர வகுப்புகள்

பள்ளியின் முதல் நாள்: செப்டம்பர் 11, 2021

கல்வி முறை: இணைய வழி

பெற்றோர்  தகவல் பரிமாற்ற கூட்டம் இருப்பதால் இந்த வாரம் மட்டும் வகுப்பு நேரங்கள் சற்று மாற்றப்பட்டுள்ளன. கவனத்தில் கொள்க!

காலை வகுப்புகள்: 10:30 – 11:30 வரை

மதிய வகுப்புகள்: 2:30 – 3:30 வரை


குழந்தைகளின் வகுப்பு ஒதுக்கீடு தகவல்

உங்கள் குழந்தைகளின் வகுப்பு ஒதுக்கீடு தகவல் என் வள்ளுவன் பக்கத்தில் (School – Class List) குறிப்பிடப்பட்டுள்ளது. கூகிள் வகுப்பறை குறியீடு (join code) அதே இடத்தில் காணலாம். சனிக்கிழமை வகுப்பில் இணைய Zoom விவரங்களை ஆசிரியர்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்புவார்கள்.


உறுப்பினர்களின் கவனத்திற்கு

அனைத்துப் பெற்றோர்களும் என் வள்ளுவன் சென்று உங்கள் குழந்தைகளின் மின்னஞ்சல், முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைச் சரி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கூகிள் இணையவழி வகுப்பில் சேர இந்தத் தகவல்கள் சரியாக இருக்க வேண்டும்.  குழந்தைகளுக்கெனத் தனியே ஒரு மின்னஞ்சல் இருப்பது அவசியம். அது பெற்றோர்களின் மின்னஞ்சல் முகவரியாக இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்க.   கூடுதல் உதவிக்கு: Instructions and FAQ for the online-class  மற்றும் How-to-change-student-member-information.


வாரம் ஒரு குறள் 

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
.
(602) 

தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர  வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!