பெற்றோர் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய கூட்டம் – பெற்றோர்  தகவல் பரிமாற்ற அமர்வு/கூட்டம் செப்டம்பர் 12, 2020 

கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணையதள இணைப்பு உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுவிட்டது.  உங்களிடம் இணைப்பு விவரங்கள் இல்லையென்றால்  help@valluvantamil.org  முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். இந்த வாரம் வழக்கமான வகுப்புகள் இல்லை.

முக்கிய வகுப்பு ஒதுக்கீடு தகவல் 

அனைத்து பெற்றோர்களும் உங்கள் குழந்தைகளுக்கான வகுப்பு ஒதுக்கீடு பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால், பெற்றோர்கள்  my.valluvantamil.org  சென்று YOUR INFO -> STUDENTS பகுதியில் அந்த விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.  அவ்விவரங்கள் அங்கு குறிப்பிடப்படவில்லை என்றால் help@valluvantamil.org முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

குறிப்பு: ஓரிரண்டு நாட்களுக்கு முன் பதிவு செய்த குழந்தைகளின் விவரங்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை.  ஞாயிற்றுக்கிழமை வரை பொறுத்திருக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

ஆசிரியர்கள் தேவை

காலை மற்றும் மதியம் வகுப்புகளில் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆர்வம் உள்ளவர்கள் ஆசிரியர்கள் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

பெற்றோர் அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டியவை 

அனைத்துப் பெற்றோர்களும் my.valluvantamil.org சென்று உங்கள் குழந்தைகளின் மின்னஞ்சல், முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைச் சரி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கூகிள் இணையவழி வகுப்பில் சேர இந்தத் தகவல்கள் சரியாக இருக்க வேண்டும்.  கூகிள் வகுப்புகளில் பங்கேற்க இந்த இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். குழந்தைகளுக்கெனத் தனியே ஒரு மின்னஞ்சல் இருப்பது அவசியம். அது பெற்றோர்களின் மின்னஞ்சல் முகவரியாக இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்க.  For  Instructions and FAQ for the online-class and How-to-change-student-member-information.

கல்வி ஆண்டிற்கான புத்தகங்கள்

தற்போதைய சூழல் காரணமாக, புத்தகங்கள் மற்றும் பிற பள்ளி பொருட்கள் அனைத்தும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும். உங்கள் முகவரி சரியாக இருத்தல் அவசியம்.  புத்தகங்கள் தொலையாமலும், சேராமலும் போவதை தவிர்க்க உதவுங்கள்.

புதிய உறுப்பினர்களின் கவனத்திற்கு  

இணையத்தளத்தில் முதல் முறை நுழையும் உறுப்பினர்கள், “கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா” இணையத்தள இணைப்பு மூலம் கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 

மாணவர் மாணவர் சேர்க்கைப் பதிவு  இறுதி நாள் செப்டம்பர் 12, 2020.

 இன்றைய நிலவரப்படி, 630 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

வரவிருக்கும் நிகழ்வு

பெற்றோர்கள் கூட்டம் – ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 20, 2020.

 இந்த கூட்டத்திற்கான கூகிள் சந்திப்பு இணைப்பு விவரங்கள் அடுத்த வாரம் அனுப்பப்படும். அந்த கூட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் நடை பெற்ற பெற்றோர் கருத்துக்கணிப்பு  முடிவுகளும், முக்கிய விவரங்களும் பகிரப்படும். பெற்றோர்களுக்கான கேள்வி-பதில் நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது.


Mandatory Parent Orientation 

Saturday, Sep 12, 2020

Please check your inbox for the Parent Orientation google meet link. If not, please email us at help@valluvantamil.org.  No regular school.


Class placement Information

All parents should have received the class placement mail,  if not please logon to my.valluntamil.org and click on YOUR INFO -> STUDENTS to see the class placement of the registered students.

If you still have questions, please email to help@valluvantamil.org

Note: If registration is completed in the past few days, the placement is still work in progress. We request these parents to wait patiently till Sunday.

Teachers needed

We still need more teachers for both sessions! If you can help, please send an e-mail to teacher committee.


Mandatory Technology Updates  

All parents, please take a moment to visit   MY VALLUVAN to update your student e-mail,  mailing address, and phone number. Click here for HOW TO?


For Google Classroom access – It is important for the student to attend the online class.Please check this page for the  Instructions and FAQ for the online-class.  Note – The students’ e-mail should not be the same as the parents’ e-mail address.  

For books and supplies – VTA has decided to mail all the books and supplies due to the current situation.  Please note, it is crucial to update your address, and if the books are lost due to incorrect mailing address in the system, VTA  will charge for additional copies. 
Attention, new members – To ensure your access, please click on forgot password for the first time login.


Student Registration Last Date Sep 12, 2020 

As of today, we have approximately 630 plus students registered.


Upcoming event

Parent Meeting  -Sunday, Sep 20, 2020

Parent Meeting google meet link will be emailed to all members next week.

Meeting Agenda    – Presentation of 2019/2020 Parent Survey and Q & A session