முக்கியமான தகவல்கள்!!
நவம்பர் 07, 2026
இணைய வழி வகுப்பு – Google classroom
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்:
நவம்பர் – 14 (நேரடி வகுப்பு -ஓவியப் போட்டி)
நவம்பர் – 21 (நேரடி வகுப்பு)
நவம்பர் – 28 (விடுமுறை)
டிசம்பர்- 05 (நேரடி வகுப்பு)
ஓவியப் போட்டி – நவம்பர் 14
ஓவியப் போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது! அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!
போட்டிக்கான விதிமுறைகள் VTA இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
விதிமுறைகளை இங்கே பார்க்கவும்
ஓவியப் போட்டிக்குப் பதிவு செய்துள்ள குழந்தைகளுக்கு, பதிவு தொடங்கும் நேரம் மற்றும் போட்டிக்குத் தேவையான முன்னேற்பாடுகள், குழந்தைகள் எவ்வாறு தயாராக வர வேண்டும் என்பன குறித்த விவரங்கள் அடுத்த வாரம் தனியாகத் தெரிவிக்கப்படும்.
மாணவர் தன்னார்வலர்கள் குறித்த வாராந்திரத் தகவல் மின்னஞ்சலில் உங்கள் விவரங்களைச் சேர்ப்பதற்கு, கீழே உள்ள இணைப்பில் உங்கள் தகவல்களைப் பூர்த்தி செய்யவும்.
https://forms.gle/cX6TQbDqUrxPt9HcA
VTA போட்டிகளில் வெற்றியாளர்களை தேர்வு செய்யும் முறை
ஒவ்வொரு குழந்தையின் முயற்சியையும் திறமையையும் கொண்டாடுவோம்!
வள்ளுவன் தமிழ் மையத்தில், ஒவ்வொரு குழந்தையின் முயற்சி, திறமை மற்றும் பங்கேற்பும் பாராட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த ஆண்டு, போட்டிகளில் வழக்கமாக வழங்கப்படும் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்குப் பதிலாக, குழந்தைகளின் திறன் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் *A, B, C தர விருதுகள்* வழங்கப்பட உள்ளன.
போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் விருது வழங்கப்படும்!
குழந்தைகள் வெற்றி, தோல்வி என்ற அழுத்தமின்றி ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் போட்டிகளில் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம்.
பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பங்கேற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒவ்வொரு முயற்சியும் பாராட்டுக்குரியது! ஒவ்வொரு குழந்தையும் வெற்றியாளரே!
தன்னார்வலர் நேரப் பதிவு
நமது வள்ளுவன் தமிழ் மையத்தின் தகவல் தொழில்நுட்பக் குழு (Technology Team) புதிய தன்னார்வலர் நேரப் பதிவு (Volunteering Hours) முறையைத் தாங்களாகவே வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! இது நமது மையத்திற்காக நீங்கள் செய்யும் அளப்பரிய சேவையை முறையாகப் பதிவு செய்யவும், அங்கீகரிக்கவும் பெரிதும் உதவும்.
தயவுசெய்து கீழ்க்கண்ட இணைப்பைப் பயன்படுத்தி இனிவரும் காலங்களில் உங்கள் தன்னார்வலர் நேரத்தைப் பதிவு செய்யவும்:
https://my.valluvantamil.org/v2/#/events
வள்ளுவன் தமிழ் மையத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவிற்கும் உழைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
ராக்கிரன் பள்ளியின் வாகனங்கள் நிறுத்தும் இடம் குறைவாக உள்ள காரணத்தால் உங்கள் நண்பர்களுடன் இணைந்து வரவும். வாகனங்கள் உள்ளே வந்து செல்லும் வரைபடத்தை இங்கு காணவும்.
வாரம் ஒரு குறள்
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (599)
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
November 07, 2026
Online Classes – Google classroom
Morning classes: 10:30 AM – 12:30 PM
Afternoon classes: 1:30 PM – 3:30 PM
Next School Days:
November – 14 (In Person – Art Competition)
November – 21 (In Person)
November – 28 (Holiday)
December – 05 (In Person)
Art Competition – November 14
The Art competition is scheduled for November 14th! Everyone, please make sure to participate!
The competition rules have been uploaded to the VTA website.
View the rules here.
Children’s registered for the art competition will receive a separate communication next week with details about the registration start time and the preparations required, including how they should come prepared for the competition.
Please fill the below link for “Student Teacher” details in the below link to add your information is weekly communicaiton email learning about student volunteer.
https://forms.gle/cX6TQbDqUrxPt9HcA
VTA Competition Awards
Celebrating Every Child’s Effort and Achievement!
At Valluvan Tamil Academy, we believe every child’s effort, creativity, and participation deserve recognition and encouragement.
This year, we are introducing a new approach to competition awards. Instead of the traditional 1st, 2nd, and 3rd place rankings, participants will be recognized based on their performance through Grade A, Grade B, and Grade C awards.
Every participating child will receive an award!*
Our goal is to create a positive and inclusive environment where children feel motivated to participate, express their talents, and build confidence without the pressure of competing for a limited number of prizes.
We encourage all parents to motivate their children to participate.
Log Volunteers Hours
We are excited to announce that our Technology Team has successfully developed an in-house Volunteering Hours module! This new feature on our portal will help us efficiently track and recognize the incredible work you do for the academy.
Please use the link below to enter your volunteering hours moving forward:
https://my.valluvantamil.org/v2/#/events
Thank you for your continuous support and dedication.
Rocky run middle schools parking lot is smaller, so please consider carpooling with your friends. Please check the map to see the entry and exit to the parking lot.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (599)
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.
Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed!
